
டப்ளின், ஆகஸ்ட்-22-Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், அயர்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலக் கோட்டை ஒன்றை வாங்கியுள்ளார்.
அவரும் அவரது மனைவி பிரிசில்லா சான் (Priscilla Chan) இருவரும், Blackwater நதிக்கரையில் அமைந்துள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Strancally கோட்டையையே வாங்கியுள்ளனர்.
440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த 3 அடுக்கு மாளிகை, 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது.
இதன் மதிப்பு சுமார் 23 முதல் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த மாளிகை எவ்வளவு பிரம்மாண்டமானது என்றால், இதன் சமையலறையிலிருந்து சாப்பாட்டு அறைக்குச் செல்லவே சுமார் நான்கரை நிமிடங்கள் நடக்கும் தூரம் உள்ளதாம்.
தவிர, இந்தக் கோட்டைக்கு அருகில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய கோட்டையின் இடிபாடுகளும், “கொலைக் குழி” (Murdering Hole) என்று அழைக்கப்படும் மர்மமான வரலாற்று பின்னணியும் உள்ளது.
சக்கர்பெர்க் குடும்பத்தினர் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசித்தாலும், Dublin-னில் உள்ள Meta அனைத்துலக தலைமையகத்திற்கு வரும்போது ஓய்வெடுக்க இந்த பாரம்பரிய மாளிகையைப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



