Latestமலேசியா

“இஸ்லாமிய நாடும் முஸ்லீம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்” கட்டுரை; ஹாடி அவாங்கிடம் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-22-Minda Presiden PAS என்ற தலையங்கத்தில் வெளியான கருத்து தொடர்பாக, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிடம் புக்கிட் அமான் போலீஸார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளனர்.

_​”இஸ்லாமிய நாடும் முஸ்லீம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்”_ என்ற தலைப்பில் ஹாடி எழுதிய கட்டுரைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

​போலீஸ் அதிகாரிகள் ஹாடியிடம் விசாரணை நடத்தியதை அவரது அரசியல் செயலாளரும் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினருமான Mohd Syahir bin Che Sulaiman உறுதிப்படுத்தினார்.

​ஹாடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அதைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

​மதச்சார்பற்ற கொள்கை மற்றும் இஸ்லாமிய நிர்வாகம் தொடர்பாக ஹாடி குறிப்பிட்ட கருத்துகள், பாஸ் மற்றும் DAP தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!