
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ‘அங்கிள் அன்வார்’ என செல்லமாக அழைத்து, பள்ளி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த சிறுவனின் பதிவு இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சுபாங் ஜெயாவைச் சேர்ந்த Al Sakeenah Learning Centre மாணவன் ஒருவன், தனது பள்ளியில் நடைபெறும் Hari Kantin நிகழ்வுக்கு வருகை தருமாறு பிரதமருக்கு Threads செயலியில் அழைப்பு விடுத்திருந்தான்.
பிரதமரை வரவழைத்தால் 100 புள்ளிகள் தருவதாக அவனது ஆசிரியர் சவால் விட்டதே இதற்கு காரணம்.
இதற்கு மிக அன்பாகப் பதிலளித்த பிரதமர் அன்வார் _’வர ஆசைதான், ஆனால் சனிக்கிழமை நான் புருணை நாட்டில் அதிகாரப்பூர்வ பணியில் இருப்பதால் வர முடியாது, மன்னிக்கவும். உங்கள் பள்ளி நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகள்… பிறகு, அதிகமா நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிடாதீங்க!’_ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த கனிவான மற்றும் எளிமையான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



