Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி குறித்து போலீஸ் விசாரணை; உள்ளூர் முக்கியப் புள்ளி, அனைத்துலக ஊடகம் தொடர்பு

கோலாலம்பூர், பிப்ரவரி-27,
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு சதித் திட்டம் குறித்து போலீஸார் கடுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சதியில், உள்ளூர் முக்கியப் புள்ளி ஒருவரும், ஓர் அனைத்துலக ஊடக நிறுவனமும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நேற்று பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ Mohd Khalid Ismail தெரிவித்தார்.
இது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கக்கூடிய செயலாகக் கருதப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
போலீஸார், விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், சமூகத்தில் தேவையற்ற யூகங்கள் மற்றும் வதந்திகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.



