புத்ராஜெயா, ஆகஸ்ட்-1, இன்று முதல் அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளிலும் பரிமாறப்படும் பானங்களில் சீனி பயன்பாடு 50 விழுக்காடுக் குறைக்கப்படும்.
அரசுத் துறை கூட்டங்களும் அதில் உள்ளடங்குமென, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி பாட்சில் (Fahmi Fadzil) கூறினார்.
மேலும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவெடுக்கப்பட்டது.
நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
அப்பிரச்னை முழுமையாகக் கையாளப்பட வேண்டுமென தொடர்புத் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
2023-ஆம் ஆண்டு ஆய்வின் படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் 15.5 விழுக்காடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.