அலோர் ஸ்டார், ஏப்ரல்-10, கெடா, அலோர் ஸ்டாரில் கார் வடிகாலுக்குள் விழுந்ததில் இளைஞர் ஒருவர் கவலைக்கிடமாக இருக்கும் வேளை, பெண் உள்ளிட்ட மேலும் இருவர் சிராய்ப்புக் காயங்களுக்கு இலக்காகினர்.
அச்சம்பவம் Kampung Gunung Sali-யில் நேற்று மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.
20 வயது மதிக்கத்தக்க அம்மூவரையும் Proton Saga Iswara காரில் இருந்து பொது மக்கள் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
நீரில் மூழ்கியதில், ஓர் ஆடவரின் நிலைமை மோசமாக இருந்ததாகவும், தீயணைப்பு மீட்புத் துறை CPR சுவாச உதவியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அம்மூவரும் சிகிச்சைக்காக உடனடியாக Sultanah Bahiyah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
கார் வடிகாலுக்குள் விழுந்ததற்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை.