Latestமலேசியா

ஆசிய மோபிலிட்டி நிறுவனம் மீதான விசாரணை 2 மாதற்திற்குள் முடிவடையும் – எம்.ஏ.சி.சி தகவல்

கோலாலம்பூர், ஆக 14 – அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் அன்னா இயோவின் (Hannah Yeoh) கணவர் ராமச்சந்திரன் தலைமை செயல்முறை அதிகாரியாக இருக்கும் Asia Mobility நிறுவனத்திற்கு சிலாங்கூர் அரசாங்கம் வழங்கிய குத்தகை தொடர்பான MACC யின் விசாரணை இரண்டு வாரத்திற்குள் முழுமையடையும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எதிர்பார்க்கிறது. தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் நிர்வாக விவகாரங்கள் குறித்த அம்சங்களை MACC இன்னமும் ஆராய்ந்து வருவதாக அந்த ஊழல் தடுப்பு நிறுவனத்தின் தலைமை ஆணையர் அசாம் பாகி ( Azam Baki ) தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேம்படுத்தக்கூடிய பல்வேறு விவகாரங்கள் குறித்தும் நங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் . குறிப்பாக உறவினர் தொடர்பான குத்தகை விவகாரங்களில் நிர்வாக அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என இன்று MACC நிகழ்ச்சி ஒன்றை தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது Azam Baki தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!