
பிரிக்ஃபீல்ட்ஸ், ஜனவரி-23-தமிழகம் சென்னையில் அமைந்துள்ள Aalim Muhammed Salegh (AMS) பொறியியல் கல்லூரி சார்பில், அதன் முன்னாள் மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் கோலாலாம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், சென்ட்ரல் விஸ்தா கோபுரத்தில் உள்ள SSLF அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கல்லூரி நிர்வாகியும் தொடர்பாளருமான முகமது சாலிஹ் மற்றும் ஆலோசகர் பேராசிரியர் முகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு, முன்னாள் மாணவர் சங்கத்தின் முக்கியத்துவத்தையும் அதன் எதிர்கால பயன்களையும் விளக்கினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, ITEF எனப்படும் அனைத்துலக தமிழ் பொறியியலாளர்கள் சங்கத்தின் மலேசியத் தலைவர் சரவணன், EDU Assist SDN BHD கழகத்தின் தலைவர் பேராசிரியர் Dr நாகராஜா லீ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவர்கள், AMS கல்லூரி முன்னாள் மாணவர்கள் மலேசியாவில் உருவாக்கும் ஒற்றுமை, தொழில்முறை கட்டமைப்பு மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வை மலேசியாவில் நடத்துவதற்கான காரணத்தை AMS-சின் முஹமட் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
AMS For ALL என்ற திட்டத்தையும் இவர்கள் முன்னெடுத்துள்ளனர்…
இந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் 25 பேர் ஒன்று கூடி, பழைய நாட்களின் இனிய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்த நிலையில், அவர்களில் இருவர் reunion மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சி நடத்த உதவிய SSLF நிறுவனத்தின் தலைவர் Dr சக்திவேலுக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த கல்லூரியின் செயல்பாட்டு நிர்வாகி தினேஷ், சார்லஸ், SSLF நிறுவனத்தின்ராஜா ஆகியோரின் முயற்சியால் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.



