Latestஇந்தியாஉலகம்

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வி; மீண்டும் முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா, ஜூன்-4, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல் அமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டியின் YSR Congress கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 இடங்களில் 159 இடங்களில் வெற்றியின் விளிம்பில் உள்ளது.

இதையடுத்து ஐந்தாண்டுகள் கழித்து சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ஆம் தேதி மீண்டும் ஆந்திர முதல் அமைச்சராகப் பதிவியேற்கிறார்.

முதல் அமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திர சட்டசபைக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இரண்டாவது முறையாக ஆட்சியைத் தொடரும் முயற்சியில் அனைத்து 174 தொகுதிகளிலும் ஜெகன் மோகனின் YSR Congress கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில், அவற்றில் 20 இடங்களைக் கூட தொட முடியாமல் திணறி வருகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பிரபல நடிகை ரோஜாவும், தான் போட்டியிட்ட நகரி தோல்வியில் தோல்வி முகத்தில் உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!