
கோலாலாம்பூர், ஏப்ரல்-28-கோலாலம்பூரில், ஒரு விசித்திரமான ஆனால் மிகவும் ஆபத்தான சம்பவத்தில், LRT தண்டவாளத்தில் புகுந்து நடனமாடியதாக இரு இளைஞர்களைப் போலீஸார் கைதுச் செய்தனர்.
Bukit OUG, முஹிபா LRT நிலையத்தில், சனிக்கிழமை இரவு 11.52 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இரு இளைஞர்கள் பாதுகாப்புக் கோட்டைத் தாண்டி, தண்டவாளத்திற்கு மிக அருகில் சென்று நடனமாடுவது CCTV கண்காணிப்புக் கேமராவில் தெளிவாகத் தெரிந்ததை அடுத்து, அங்கிருந்த உதவிப் போலீஸார் உடனடியாக அவர்களைக் கைதுச் செய்தனர்.
புக்கிட் ஜாலில் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்ட 16 மற்றும் 17 வயதுடைய இருவரும், விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டு, ஞாயிறன்று போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இச்செயல் அவர்களின் உயிருக்கு மட்டுமன்றி, LRT சேவையின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததந் அடிப்படையில், 1961-ஆம் ஆண்டு இரயில் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், இளம் குற்றவாளிகள் என்பதாலும், நடவடிக்கை எடுத்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதாலும், இருவரையும் விடுவிக்க அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டார்.
என்றாலும், எந்தவொரு மேல் உத்தரவுக்கும் தாங்கள் காத்திருப்பதாக, செராஸ் போலீஸ் தலைவர் Mohd Rosdi Daud கூறினார்.



