Latestஇந்தியா

ஆல்கஹால் அல்லாத உலகின் மிகச் சிறந்த பானங்கள் பட்டியல்; இந்தியாவின் ‘மசாலா சாய்-க்கு’ இரண்டாவது இடம்

புதுடெல்லி, ஜனவரி 30 – ஆல்கஹாலுக்கு அடிமையானவர்களை காட்டிலும், டீ-க்கு அடிமையான டீ பிரியர்கள் தான் நம்மில் அதிகம்.

அதுவும் மணக்கும் நறுமண மசாலா டீ என்றால் சொல்லவே வேண்டாம்.

உலகின் பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ் (TasteAtlas), இந்தியாவின் “மசாலா சாயை”, 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் இரண்டாவது சிறந்த மது அல்லாத பானமாக மதிப்பிட்டுள்ளது.

இந்தியர்களால் அதிகம் விரும்பி அருந்தப்படும் மசாலா சாய், நம் நாட்டில் மசாலா டீ என அழைக்கப்படுகிறது.

நம் நாட்டில் மட்டுமல்ல, இந்தியர்கள் எங்கெல்லாம் புலம்பெயர்ந்து வாழ்கிறார்களோ அங்கெங்லாம் இந்த மசாலா டீயை எளிதாக வாங்கி பருகலாம்.

ஏலக்காய், இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு போன்ற மசாலா கலவையுடன் மசாலா டீ தயாரிக்கப்படுகிறது.

எனினும், இடத்திற்கு ஏற்ப மசாலாப் பொருட்களின் தேர்வும், அதன் விகிதமும் மாறுபடும்.

இவ்வேளையில், டேஸ்ட் அட்லஸ் பட்டியலில், பழங்கள், வெள்ளரிக்காய், பூக்கள், விதைகள், தாணியங்களுடன் சர்க்கரை மற்றும் தண்ணீரை கொண்டு தயாரிக்கப்படும் மெக்சிகோவின், அகுவாஸ் ப்ரெஸ்காஸ் (Aguas Frescas) பானம் முதல் இடத்தையும், இந்தியாவின் மாம்பழ லஸ்ஸி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!