Latestமலேசியா

ஆளில்லை ஆனால் நள்ளிரவில் கதவை தட்டும் மர்ம சத்தம்; குவால பிலாவில் கம்பத்து மக்கள் பீதி

குவாலா பிலா, ஜன 9 – குவாலா பிலா, கெபிஸ் உலு எனும் கம்பத்தில் நள்ளிரவில் ஆளில்லாமல் கதவு தட்டுவது பிறகு கதவுப்பிடியை சுழற்றும் மர்ம சத்தம் கேட்டு கடந்த டிசம்பர் 31 தொடங்கி அங்கு வசிப்பவர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

இதுவரை 16 வீடுகளில் அழையா விருந்தாளி மர்ம ஆசாமி இவ்வாறு செய்கிறாரோ என பலரும் பதில் தெரியாமல் கேட்கின்றனர்.

‘முடிந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 3:50 மணியளவில், நான் என் பாட்டி மற்றும் 10 வயது மகளுடன் தூங்கி கொண்டிருக்கும் போது மூன்று முறை கதவு தட்டும் ஓசை கேட்டது. பின்பு, கதவின் பிடியை யாரோ திருப்பினார்கள். உடனே எழுந்து வீட்டில் விளக்குகளை தட்டினேன். இருப்பினும் கதவை திறக்கவில்லை. கண்ணாடி வழியே வெளியே பார்த்த போது, யாரும் தென்படவும் இல்லை என 38 வயது நஃபிசா முகமட் சஹாபுதீன் என்பவர் அவருக்கு தனக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

மனிதர்கள் வந்த தடையத்தை வீட்டின் முன் அவர்களால் கண்டறிய முடியவில்லையாம்.
ஆச்சரியம் என்னவென்றால், சிலர் வீட்டில் நாய்கள் இருந்தும் அவை அச்சமயத்தில் குரைக்கவும் இல்லையாம்.

இதனிடையே, கம்புங் கெபிஸ் உலுவின் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர் அஃபெண்டி பஹாருடின் கூறுகையில், அந்த இருப்பிடத்தைச் சுற்றி ரோந்து பணிகளை மேற்கொள்ள மலேசிய தன்னார்வத் துறை மற்றும் காவல்துறையின் உதவியைக் கேட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த திகிலூட்டும் மர்ம சம்பவத்தை அடுத்து, பள்ளிவாசல்களிலும் தொழுகைகளை இரவில் 3 நாட்கள் தொடர்ந்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!