Latestஉலகம்

ஆஸ்திரேலியாவில் மதுபான விடுதியில் கார் மோதியது இரு சிறார்கள் உட்ப ஐவர் மரணம்

சிட்னி, நவ 6 – ஆஸ்திரேலியாவில் பிரபலமான சுற்றுலா நகரில் மதுபான விடுதியில் SUV வாகனம் மோதியதில் இரு சிறார்கள் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.

மெல்போர்னிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டாய்லெஸ்போர்ட் ‘Daylesford’ என்ற இடத்தில் நேற்று மாலையில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே நால்வர் இறந்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவர் பின்னர் மரணம் அடைந்தார். அந்த வாகனம் மதுபான விடுதியில் மோதியபோது அந்த விடுதிக்குள் அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். வாகனம் மோதியபோது மதுபான விடுதியிலுள்ள மேஜைகள் அங்குள்ள வாடிக்கையாளர்கள் மீது விழுந்ததாக போலீஸ் அதிகாரி ஷேன் பாட்டன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!