Latestஉலகம்

இங்கிலாந்தில் திடீரென தோன்றிய எஃகு தூண்; ஏலியன்களின் வேலையோ என நெட்டிசன்கள் கலாய்

கார்டிஃப், மார்ச் 13 – UK, Wales-சில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் மூன்று மீட்டர் உயரத்தில் ஒற்றை எஃகு தூண் திடீரென தோன்றியிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராட்சத Toblerone வகை சாக்லெட் போல காட்சியளிக்கும் அந்த எஃகு தூண் அங்கு புதிதாக முளைத்திருப்பதை ‘Powys’ நகரில் வசிப்பவர்கள் கடந்த கடந்த வார இறுதியில் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

“மழை நீர் சேகரிப்பு தொடர்பான ஓர் அறிவியல் ஆராய்ச்சி கருவியாக இருக்கலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால், நான் இன்னும் நெருக்கத்தில் சென்று பார்த்த போது, ​​​​அது சற்று உயரமாகவும் அதன் முக்கோண வடிவம் வித்தியாசமாகவும் இருந்தது,” என அந்த மர்மப் பொருளை புகைப்படம் எடுத்த ரிச்சர்ட் ஹேயன்ஸ் என்பவர் கூறினார்.

இந்த மர்ம தூண் எதிர்பார்த்தபடியே நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு யூகங்களைக் கிளப்பி வருகிறது.

ஒருவேளை வேற்றுலகவாசிகளின் வேலையாக இருக்குமோ என சிலர் கமெண்ட் அடிக்கும் வேளை, சாலைக் கலைஞர் ‘Banksy’ உருவாக்கும் கலை வேலைப்பாடு போன்ற ஒன்று தான் இதுவும் என மற்றவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற மர்ம பொருள் தோன்றுவது புதிதல்ல.

இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் புறநகர் பகுதிகளில் இது போன்ற மர்ம தூண்கள் தோன்றியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இது மனிதர்களின் வேலையா அல்லது நெட்டிசன்கள் சொல்வது போல் வேற்றுலகவாசிகளின் வேலையா என்பதை ஆராய்சியாளர்கள் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!