கோத்தா பாரு, நவ 21 – Love Scam எனப்படும் இணைய காதல் மோசடி சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களில் 79.3 விழுக்காட்டினர் பெண்களாக உள்ளனர். இணைய காதல் மோசடியில் ஈடுபடுபவர்களின் முக்கிய இலக்கு தனியாக இருக்கும் பெண்களும் விரத்தியான நிலையில் தோழமையை நாடும் பெண்களும் இருப்பதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. மோசடி செய்யும் நபர்கள் ஏமாற்றக்கூடிய பல்வேறு தந்திரங்களை கையாள்வதோடு , கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் இனிமையான பேசும் குரல்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் கணிசமாக தொகையை பெறுவதற்கு ஈர்க்கப்படுவதால் அவர்கள் அடிக்கடி பெரிய அளவில் பணத்தை மோசடி செய்கின்றனர்.
2022 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம்வரை பதிவான 2,223 காதல் மோசடி வழக்குகளில் 79.3 விழுக்காட்டினர் பெண்கள் என போலீஸ் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தொடக்கத்தில் மோசடி திட்டத்தை உணர்ந்தாலும் இனிமையான காதல் வார்த்தைகளுக்கு மயங்கி பெரிய அளவில் பண மோசடிக்கு உள்ளாகின்றனர்.