கூலாய் , ஏப் 2 – இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லையென என்று துணைத் தொடர்புத்துறை துணையமைச்சர் Teo Nie Ching தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்திடம் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. , குறிப்பாக Nacsa எனப்படும் தேசிய கணினி பாதுகாப்பு நிறுபவனம் இணைய தாக்குதல் மற்றும் ஊடுருவல் விவகாரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார். சைபர் தாக்குதல்கள் ஒரு புதிய பிரச்சினை அல்ல, குறிப்பாக இலக்கவியல் தொலைத்தொடர்பு அம்சங்கள் மிகவும் மேம்பட்டதாக இருக்கும் என்று Teo தெரிவித்தார். இதுகுறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றாலும் உண்மையில் சைபர் தாக்குதல்கள் குறிப்பாக உணர்திறன் மற்றும் பெரிய சிக்கல்களை உள்ளடக்கியவை என தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே அரசாங்கம் சைபர் பாதுகாப்பு மசோதாவை உருவாக்கியுள்ளது. தரவு மையங்கள், மருத்துவமனைகள், வங்கி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. கூலாய் தொகுதியில் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் இத்தகவலை வெளியிட்டார். நாட்டிற்கு முக்கியமான பாதுகாப்பான சொத்துக்களை கையாள்வதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் உட்பட உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.