Latestமலேசியா

மத தீவிரவாதத்துக்கு எதிராக நிந்தனைச் சட்டம்; ஒருமைப்பாட்டு அமைச்சு போலீஸுக்கு முழு ஆதரவு

கோலாலம்பூர், பிப்ரவரி-6-மத தீவிரவாதத்துக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மதத்தை தவறாக பயன்படுத்தி வெறுப்பைப் பரப்பும் மற்றும் சமூக ஒற்றுமையை சிதைக்கும் எந்த நபரோ அல்லது கும்பலோ, தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் உட்பட கடுமையான நடவடிக்கைக்கு உட்பட வேண்டும் என, அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கூறினார்.

“கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு, ஆனால் அது முழுமையானதல்ல; இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான விஷயங்களில் பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தக்கூடாது” என்றார் அவர்.

போலீஸும், தேசிய சட்டத் துறை தலைவர் அலுவலகமான AGC-யும் இணைந்து, குற்றவாளிகள் மீது தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு-பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கும்.

சமூக ஊடகங்களிலும் தீவிரவாதத்துக்கு இடமில்லை என அமைச்சர் எச்சரித்தார்.

சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர்களான சாம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிடுவான் தீ அப்துல்லா, மற்றும் ‘cikgu Chandra’ மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, மக்களவையில் ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் எழுப்பியக் கேள்விக்கு ஏரன் அவ்வாறு பதிலளித்தார்.

நாளை கோலாலம்பூர் SOGO பேரங்காடி அருகே நடைபெறவுள்ள ‘சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியை அரசாங்கம் இரத்துச் செய்யுமா எனவும் ராயர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஏரன், அந்த முடிவு உள்துறை அமைச்சு மற்றும் போலீஸை பொருத்தது என்றார்.

சாம்ரி வினோத் தலைமையில் 141 அரசு சார்பற்ற அமைப்புகள் அப்பேரணியில் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!