
அலோர்காஜா, மே-4-இன்று காலை, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில்
213.4- ஆவது கிலோமீட்டரில் இந்திய சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்தது.
காலை மணி 10.18க்கு நடந்த இந்தச் சம்பவத்தில், கோலாலம்பூரிலிருந்து வந்துகொண்டிருந்த அந்தப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்து சறுக்கியபின் கால்வாயில் விழுந்தது.
அவசர அழைப்பு கிடைத்தவுடன், 10 பணியாளர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இரண்டாவது மண்டலத்தின் தலைவர் சுல்கைரானி ரம்லி ( Zulkhairani Ramli ) தெரிவித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த 8 சுற்றுப் பயணிகள் மற்றும் உள்ளூர் ஆடவர் என ஒன்பது பேர் அந்த பேருந்தில் இருந்தனர்.
அவர்களில் மூன்று ஆடவர்கள், மூன்று பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்களும் அடங்குவர். பேருந்து ஓட்டுநருடன் அதில் இருந்த இரண்டு சிறுவர்களும் சொற்ப காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ மீட்பு சேவை உறுப்பினர்கள் முதலுதவி வழங்கிய பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Zulkhairani Ramli குறிப்பிட்டார்.



