Latestமலேசியா

இந்திய மாணவர்கள் TVET திறன் பயிற்சிக் கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – துணைப்பிரதமர் சாஹிட் வலியுறுத்து

கோலாலம்பூர், டிச 8 – உலகமே தொழில்த்துறை புரட்சி 4.0 நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய மாணவர்கள் இதில் பின்னடைவை எதிர்கொள்ளாமல் இருக்க, நாட்டிலுள்ள TVET, திறன் பயிற்சிக் கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி வலியுறுத்துவதாக கூறுகிறார் அவரின் சிறப்பு அதிகாரி அரவிந்த் அப்பளசாமி.

தேசிய TVET மன்றத்தின் தலைவராகவும் இருக்கும் சாஹிட் ஹமிடி, இந்திய மாணவர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடாமல் இருப்பதை உறுதி செய்ய சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, அதன் வழி தகுதிப்பெற்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இந்த TVET, திறன் பயிற்சிக் கல்வி வாய்ப்பு வழங்கவுள்ளார் என்றும் அரவிந்த் கூறுகிறார்.

அதே சமயத்தில், கல்வி மட்டுமே வெற்றியை நோக்கியப் பயணத்திற்கான சமுதாயத்தின் திறவுகோள். எனவே முடிந்த வரை அனைத்து வகையான கல்வி வாய்ப்புகளையும் நம் இந்திய இளைஞர்கள் பற்றிக் கொள்ள வேண்டும். எனவேதான், பைனரி பல்கலைகத்துடன் ஒன்றிணைத்து சுமார் 300 மாணவர்களுக்கான் முழு உபகாரச்சம்பளத்துடன் கூடிய கல்வி வாய்ப்பை துணைப்பிரதமட் முன்னெடுத்திருப்பதாக கூறுகிறார் அரவிந்த்.

இந்த கல்வி வாய்ப்பினை எப்படி பெறுவது, அல்லது விண்ணப்பத்தில் ஏற்படும் கோளாருகள் குறித்து தம்மை அணுகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!