Latestமலேசியா

இந்துக்களை இழிவுப்படுத்தினேனா? முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் : ராயருக்கு சம்ரி வினோத் சவால்

கோலாலம்பூர், மார்ச் 27 – மலேசிய இந்துக்களை தாம் இழிவுப்படுத்தியதை நிரூபிக்க முடியுமா என, சமய சொற்பொழிவாளர் Muhammad Zamri Vinoth Kalimuthu, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயருக்கு சவால் விடுத்துள்ளார்.

எங்கே, எப்போது நான் அவ்வாறு இந்துக்களை இழிவுப்படுத்தினேன் என்பதை ராயரும், அவரின் நாடாளுமன்ற சகாக்களும் நிரூபிக்கட்டும் என Zamri Vinoth மலேசிய கினியிடம் காட்டமாகக் கூறியுள்ளார்.

தம்மைக் குற்றம் சாட்டிய ராயர், அதனை ஏன் விவரிக்கவில்லை என Zamri பதில் கேள்வி எழுப்பினார்.

உண்மையில், இஸ்லாமியர்களின் புனித காபாவில் சிவலிங்கம் இருப்பதாக சில இந்துக்கள் கூறிக் கொள்வது குறித்து தான், டிக் டோக் வீடியோவில் தாம் விளக்கமளித்திருந்ததாக Zamri Vinoth சொன்னார்.

Kaabah குறித்து அப்படியொரு குற்றச்சாட்டை அவர்கள் வைக்காதிருந்தால், அதற்கு விளக்கமளிக்கும் அவசியமும் தமக்கு வந்திருக்காது என அவர் கூறினார்.

பார்க்கப் போனால், ராயரும் அவரின் சகாக்களும், Kaabah குறித்து சில இந்துக்கள் கூறியவற்றை, அவர்களிடத்தில் தான் போய் கேட்க வேண்டும்.

இஸ்லாம் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க மட்டுமே செய்தேன்; அது எவ்வகையில் தவறாகும் என Zamri Vinoth கேட்டார்.

இஸ்லாம் அல்லாத சமயங்களை இழிவுப்படுத்தும் Muhammad Zamri Vinoth Kalimuthu உள்ளிட்ட சமயச் சொற்பொழிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, மக்களவை மற்றும் மேலவையைச் சேர்ந்த ஒற்றுமை அரசாங்க இந்தியப் பிரதிநிதிகள் முன்னதாக உள்துறை அமைச்சை வலியுறுத்தியிருந்தனர்.

வேற்று மதத்தவராக இருந்துக் கொண்டு சிவலிங்கம் குறித்து Zamri பேசுவதானது, சிவபெருமானையே இழிவுப்படுத்தும் செயல் என ராயார் சுட்டிக் காட்டியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!