
இந்தோனேசியா – ஜூலை 8 – நேற்று, இந்தோனேசியாவில் மவுண்ட் லெவோடோபி லக்கி (Gunung Lewotobi Laki-Laki) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, இன்று மலேசியாவிலிருந்து இந்தோனேசியா புறப்படவிருக்கும் அனைத்து பயணிகளும் தங்களது விமான அட்டவணைகளை விமான நிறுவனங்களுடன் சரிப்பார்த்துக் கொள்ளுமாறு மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) அறிவுறுத்தியுள்ளது.
விமான தடை, பயண நேர மாறுதல் போன்ற இடையூறுகள் குறித்த அதிகாரப்பூர்வ விமான அறிவிப்புகளைக் கண்காணிக்கவும் CAAM பயணிகளை வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள தீவுகளான பாலி மற்றும் லாபுவான் பாஜோவிற்குச் செல்லும் இரு வழி விமான பயணங்கள் யாவும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.