Latestமலேசியா

‘இரும்புப் பெண்மணி’ ஓய்வு பெற்ற ACP சந்திரமலர் காலமானார்

கோலாலம்பூர், டிச 10 – 1970களில் அனைவராலும் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட காவல் அதிகாரி, ACP சந்திரமலர் உடல்நலம் காரணமாக காலமானார்.

இந்த துயரச் செய்தியை அவரது குடும்ப உறுப்பினர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

1939ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்தவரான இவர், ஜோகூர் குளுவாங்கில்தான் வளர்ந்தார். குறுகிய காலம் ஆசிரியராக பணிபுரிந்த இவர், 1960ல் போலிஸ் படையில் இணைந்தார்.

பினாங்கு தீவில், போதைப்பொருள், விபச்சாரம் என அனைத்து வகை வன்செயல்களும் தலைத்தூக்கி நின்ற சமயத்தில், 1972ல் சந்திரமலர் அங்கு குற்றத் தடுப்பு பிரிவின் துணை இயக்குனராக பதிவியேற்றார்.

அன்று தொடங்கி, குற்றங்களை துடைத்தொழித்து, குற்றவாளிகள் பார்த்து பயப்படும் அளவிற்கு தன் கடமையை செவ்வனே செய்தார். ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் வலிமையும், பெருமையும் சேர்க்கும் வண்ணம் அவரது பணிக்காலம் அமைந்திருந்தது.
போதைப்பொருள் பித்தர்கள், விபச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் என செய்த குற்றத்திலிருந்து திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு பல உதவிகளை செய்த பெருமையும் ACP சந்திரமலரைச் சேரும்.

அதில், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுமியை காப்பாற்றிய சம்பவமும் அடங்கும்.

இப்படி, நாட்டில் குற்றங்களை துடைத்தொழிக்க துணிகரமாக பல சாதனைகளைச் செய்த இரும்புப் பெண்மணியின் மரணம் மிகப்பெரிய பேரிழப்பாகும் என முன்னாள் பினாங்கு மாநில காவல் துறை கமிஷ்னர், டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பார்ப்பதற்கு மென்மையாகவும், எப்பொழுதும் புன்முறுவலோடும் காணப்படும் அவர், பல காவல் துறை அதிகாரிகளுக்கும், அரச மலேசிய காவல் பயிற்சி கல்லூரியிலும், குற்றவியல் சட்டங்களைப் போதித்தவர் என கூறுகிறார் 1985-86ம் ஆண்டுகளில், அவரிடம் காவல் சட்டம் பயின்ற மற்றும் அவரின் கீழ் பணியாற்றியுள்ள தெய்வீகன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!