கோலாலம்பூர், ஏப்ரல் 5 – இன்றைய இளைஞர்கள் சமூக உருமாற்றுத்துக்கான பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அந்த எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்யும் வகையில் ம.இ.கா-வின் தேசிய இளைஞர் பிரிவு தயார்நிலையில் இருப்பதோடு எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் துடிப்போடு செயல்பட களம் இறங்க காத்திருப்பதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மாறிவரும் அரசியல் மற்றும் சமூக சூழலுக்கு ஏற்ப இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை தாங்கள் நன்கு உணர்ந்துள்ளதாக அவர் பகிர்ந்தார்:
சமுதாயத்தின் உருமாற்றத்தை இலக்காக வைத்து ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில், உயர்க்கல்வி பயில நிதி உதவி, சமுதய நலனுக்கான நடவடிக்கைகள், தனித்து இயங்கும் தன்மை என கட்சி தொடர்ந்து செயல்படுவதாக கூறிய அர்விந்த் அவரின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்த இளைஞர் பிரிவு முனைப்பு கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஓரே இலக்கில் அனைத்து பிரிவு இளைஞர்களையும் அரவணைத்து செல்ல இளைஞர் பிரிவில் தாமும் பலரும் புதிய உத்வேகத்தில் தயார் நிலையில் இருப்பதாக கூறினார் அர்விந்த்.
விரைவில் இளைஞர் பிரிவின் தலைவர் பதவிக்குப் போட்டி நடைப்பெறவுள்ள நிலையில், தேசிய தலைமைத்துவத்தின் இலக்கை அடைய புதிய மாற்றங்களை உட்புகுத்தி கட்சியையும் சமூகத்தையும் பலப்படுத்த தாம் களத்தில் முழு வீச்சாய் ஈடுபட தயாராக இருப்பதாக உறுதியாக கூறினார் அர்விந்த்.