Latestமலேசியா

இ-மடானி உதவித் தொகைக்கு தகுதி பெற, 2022 வருமான வரியை தாக்கல் செய்திருக்க வேண்டும்; கூறுகிறது MOF

கோலாலம்பூர், டிசம்பர் 8 – இ-மடானி உதவித் தொகையைப் பெற, மலேசியர்கள் தங்களின் 2022 வருமான வரியை தாக்கல் செய்திருக்க வேண்டும் என, நிதி அமைச்சு தனது முகநூல் மற்றும் X சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

2022 வருமான வரி தாக்கல், ஒருவர் இ-மடானி உதவித் தொகையை பெற தகுதியானவர்களா? என்பதை சரிபார்க்க பயன்படுத்தப்படும்.

குறிப்பிட்ட காலத்தில் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறியவர்கள் இ-மடானி உதவித் தொகையை பெற தகுதி பெற மாட்டார்கள்.

ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான வருமானம் பெறுபவர்களும் அதில் அடங்குவார்கள் என நிதி அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், சிலர் முறையாக வருமான வரியை தாக்கல் செய்திருப்பவர்கள் அல்லது ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானத்தை பெறுபவர்களாக இருக்கும் போதும், அவர்களின் இ-மடானி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கு அவர்களின் இ-வொல்லட் தளத்தில் இருக்கும் விவரமும் உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விவரமும் மாறுபட்டிருப்பதே காரணமாக இருக்கலாம்.

அது போன்ற சூழலை எதிர்நோக்கியுள்ளவர்கள், தாங்கள் பயன்படுத்தும் இ-வொல்லட் தளம் வாயிலாக அவர்கள் இ-மடானி உதவித் தொகைக்கு மேல்முறையீடு செய்யலாம்.

அல்லது 03-88824565 அல்லது 03-88824566 என்ற எண்களில் நிதியமைச்சை தொடர்புக் கொண்டு மேல்முறையீடு செய்யலாம்.

emadani@treasury.gov.my எனும் மின்னஞ்சலில், முழு பெயர், அடையாள அட்டை எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டும் அவர்கள் மேல்முறையீட்டை சமர்ப்பிக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!