Latestமலேசியா

ஈப்போவில், சுவிட்சிலாந்து ஆடவர் செலுத்திய மைவி கார்; எண்ணெய் நிலைய பல்நோக்கு கடையை மோதி விபத்து

ஈப்போ, ஜனவரி 10 – பேராக், ஈப்போவில், சுவிட்சிலாந்து நாட்டை சேர்ந்த முதியவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி ரக கார் ஒன்று, தாமான் கேனிங் எண்ணெய் நிலைய பல்நோக்கு கடையை மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று காலை மணி 10.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.

“கால்டெக்ஸ்” நிலையத்தில், பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த 77 வயது முதியவர் காரை சரியாக நிறுத்த முயன்ற போது, அவருக்கு வலது கால் பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனால், காரை கட்டுப்படுத்த முடியாமல், முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா Y16ZR ரக மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய அவர், பின்னர் பல்நோக்கு கடையின் கண்ணாடியை இடித்து விபத்துக்குள்ளானதாக, ஈப்போ போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் யாஹ்யா ஹசான் தெரிவித்தார்.

அவ்விபத்தில், உள்நாட்டு பெண் ஒருவர் வலது காலில் காயமடைந்தார்.

எனினும், மைவி காரை செலுத்திய முதியவருக்கும், 29 வயது மோட்டார் சைக்கிளோட்டிக்கும், 42 வயது எண்ணெய் நிலைய உரிமையாளருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

அச்சம்பவம் தொடர்பில், விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை; யாரும் கைதுச் செய்யப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!