Latestமலேசியா

ஈப்போவில் பெரியக் கால்வாயினுள் தவறி விழுந்து மரணமடைந்த 63 வயது முதியவர்

ஈப்போ, மே-24 – ஈப்போ, Kampung Sungai Rapat, Sungai Pinji-யில் உள்ள பெரியக் கால்வாயில் தவறி விழுந்ததாக நம்பப்படும் 63 வயது ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அவர் காணாமல் போனதாக பொது மக்களிடம் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணி வாக்கில் தகவல் கிடைத்து போலீஸ் தேடும் நடவடிக்கையில் இறங்கியது.

கால்வாயில் தேடியதில் அம்முதியவரின் சடலம் ஒரு வழியாகக் கண்டெடுக்கப்பட்டது.

சவப்பரிசோதனைக்காக ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனைக்கு சடலம் அனுப்பப்பட்டதில், அந்நபர் நீரில் மூழ்கியே இறந்திருப்பது உறுதிச் செய்யப்பட்டது.

குற்றவியல் அம்சங்கள் எதுவும் அதில் இல்லை என்பதால் திடீர் மரணமாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!