Latestமலேசியா

ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்கு அன்வார் வரவேற்பு: நீடித்த அமைதிக்கு வலியுறுத்து

புத்ராஜெயா, ஏப்ரல்-8-2 வாரங்கள் போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சமாதான திட்டத்தை, மலேசியா பெரிதும் வரவேற்றுள்ளது.

மத்தியக் கிழக்கில் பதற்றத்தை குறைக்கும் எந்த அரச தந்திர முயற்சிகளையும் மலேசியா ஆதரிக்கும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் நேர்மையாகவும் உண்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதே மலேசியாவின் விருப்பம் என அவர் வலியுறுத்தினார்.

மறைமுக நோக்கங்களோ அல்லது ஏமாற்றங்களோ இருந்தால், சமாதான பேச்சுகள் வெற்றியடையாது என்றும் அன்வார் எச்சரித்தார்.

அனைத்துத் தரப்புகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், உலக தலைவர்கள் மோதலுக்கு பதிலாக அமைதியான தீர்வுகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

Hormuz நீரிணையைத் திறக்க ஈரானை நிர்பந்திப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய அமைதித் திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக முன்னதாக அவர் அறிவித்தார்.

இதன் மூலம் பதற்றம் சற்று குறைந்துள்ளது அனைத்துலக சமூகத்தை நிம்மதியடைச் செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!