Latestமலேசியா

‘உங்க அப்பாவின் சாலையா?’; சிக்னலை பயன்படுத்தாத வாகனமோட்டிகளை கேலி பாடல் வாயிலாக வறுத்தெடுத்த யூடியூப்பர் வைரல்

கோலாலம்பூர், ஜனவரி 29 – சாலையை மாற்றும் போது, “சிக்னலை” பயன்படுத்த தவறும் சில வாகனமோட்டிகளின் எரிச்சலூட்டும் செயலை நம்மில் பலர் பார்த்திருப்போம் அல்லது எதிர்கொண்டிருப்போம். அது மிகவும் ஆபத்தான செயலும் கூட.

பிரைசன் லூ (Bryson Lew) எனும் யூடியூப்பர் ஒருவர், அதுபோன்ற சூழலை எதிர்கொள்ளும் ஓட்டுனர்களின் ஒட்டு மொத்த விரக்தியையும் ஒரு நமட்டு பாடல் வீடியோ வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற வாகனமோட்டிகள் அல்லது சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, சிக்னலை முறையாக பயன்படுத்துமாறும் அந்த பாடல் வாயிலாக பிரைசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தி சிக்னல் சாங்” (The Signal Song) எனும் அந்த இரண்டு நிமிட பாடல் வீடியோவில், சாலையில் பயணிக்கும் பிரைசனின் வழியில், சிக்னல் போடாமல் நீல நிற கார் ஒன்று குறுக்கிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதனால், வழக்கமாக எரிச்சல் அடையும் மலேசியர்கள் அதிகம் பயன்படுத்தும், “உங்க அப்பா வீட்டு ரோடா?” எனும் நமட்டு வாசகத்தை வைத்து பிரைசன் அப்பாடலை இயற்றியுள்ளார்.

அதோடு, “சிக்னலை பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் சிறந்த ஓட்டுனர் என அர்த்தமா?” எனவும் அவர் சற்று கடுமையாக அந்த வீடியோவிற்கு கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த மியூசிக் வீடியோவிற்கு கீழ், இணைய பயனர்கள் சிலர், தங்கள் காரின் சிக்னல் விளக்குகளை ஆன் செய்யும் காட்சிகளுடன், அதனை ஆன் செய்வது மிகவும் எளிது எனவும் பதிவிட்டுள்ளனர்.

பிரைசனின் அந்த மியூசிக் வீடியோ வைரலாகியுள்ளதோடு, உள்நாட்டு வானொலிகளிலும் அது ஒலிபரப்பட வேண்டுமென, பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!