Latestமலேசியா

உடம்புபிடி மையம் என்ற போர்வையில் விபச்சாரம்; ஷா ஆலாமில் 11 பேர் கைது

ஷா ஆலாம், ஏப்ரல்-17-சிலாங்கூர், ஷா ஆலாமில் உடம்புபிடி மையங்கள் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஒரு பெரிய கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர்.

இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாகப் பொது மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

செக்‌ஷன் 32, புக்கிட் ரிமாவில் நேற்றிரவு 8 மணிக்கு இச்சோதனை நடத்தப்பட்டது.

இம்மையங்கள் வெளியில் இருந்து பார்க்கும்போது முறையான உடம்புபிடி நிலையங்கள் போலத் தெரிந்தாலும், உள்ளே சட்டவிரோதச் செயல்கள் நடந்து வந்தது சோதனையில் அம்பலமானது.

அதில், வியட்நாம், தாய்லாந்து, சீனா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 பேர் கைதாகினர்.

பெருமளவிலான ரொக்கப்பணம், கைபேசிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல் சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக இரகசியமாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடம்புபிடி சேவைக்கு 40 ரிங்கிட்டும், பாலியல் நடவடிக்கைகளுக்கு 200 ரிங்கிட் வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்பட்டும் வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் செமஞே குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!