Latestமலேசியா

உணவகத்தில் குழந்தை அலங்கோலமாக சாப்பிட்டதாம்; அதனால் கூடுதலாக 5 ரிங்கிட் கட்டணமாம் – ஆடவர் குமுறல்

கோலாலம்பூர், ஜூன்-25,

உணவகத்தில் குழந்தை அலங்கோலமாக சாப்பிட்டதாகக் கூறி, கூடுதலாக 5 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்து ஆடவர் ஒருவர் குமுறியுள்ளார்.

அண்மையில் கோலாலம்பூரில் உள்ள ஓர் உணவகத்துக்கு 2 வயதுக் கூட ஆகாத குழந்தையுடன் சென்ற போது, @meinmokhtar எனும் அந்த X தள பயனருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.

கைலான் ஈக்கான் மாசின் (Kailan Ikan Masin), Telur Dadar முட்டைப் பொரியல், சியாக்காப் தீகா ராசா (Siakap 3 Rasa) ஆகியவற்றை அவர் ஆர்டர் செய்து சாப்பிட்டார்.

அதன் மொத்தக் கட்டணம் 55 ரிங்கிட்; ஆனால், கட்டண ரசீதில் 5 ரிங்கிட் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது.

Cashier-ரைக் கேட்டால், மேசையில் குழந்தை அலங்கோலமாக சாப்பிட்டதை ஈடுகட்டவே என பதில் வந்திருக்கிறது.

இதை சற்றும் எதிர்பாராத அவ்வாடவர், 2 வயது குழந்தை கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

வழக்கமாக உணவகங்களில் வாடிக்கையாளர் மேசையில் உணவுகள் சிந்தினால், அங்குள்ளப் பணியாளர்கள் அவற்றைச் சுத்தம் செய்வர்.

ஆனால் அபராதம் விதிப்பது தனது அனுபவத்தில் இதுவே முதன் முறை என அவர் கூறிக் கொண்டார்.

அதனை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் (KPDN) புகார் செய்ய முடியுமா என்றும் தனது followers-களை அவர் கேட்டார்.

அவரின் பதிவைப் பார்த்தவர்கள் கலவையான கருத்துகளைப் பதிவுச் செய்து வருகின்றனர்.

அபராதம் விதிக்கப்படுகிறது என்றால் எந்த அளவுக்கு உணவுகள் மேலும் கீழும் சிந்தியிருக்கும் என சிலர் கேள்வி எழுப்பிய வேளை, சிலர் அவர் மீது அனுதாபப்படவும் செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!