
நியூ யோர்க், ஜூலை-17-மலேசிய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை நடைபெறவுள்ள ஸ்பெயின் – அர்ஜேண்டினா இடையிலான உலகக் கிண்ணக் கால்பந்து இறுதியாட்டம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
அதே சமயம், அவ்வாட்டத்திற்கான டிக்கெட்டுகளின் விலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆகக் குறைந்த விலை டிக்கெட்டே 28,000 ரிங்கிட் வரை விற்பனையாகிறது.
இது இந்தப் போட்டியின் மீதான உலகளாவிய ஆர்வத்தை உணர்த்துகிறது.
இந்த பரபரப்பான சூழலில், நியூ ஜெர்சியில் நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கலந்துகொள்வார் என்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான உலகக் கிண்ணத் தொடர் இது என்று ட்ரம்ப் ஏற்கனவே பெருமிதம் தெரிவித்திருந்தார்.
அதன் உச்சகட்ட நிகழ்வாக அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார்.
வெற்றியாளருக்கு உலகக் கிண்ணத்தை எடுத்து வழங்கப் போவதும் ட்ரம்பே.
டிக்கெட் விலை இவ்வளவு அதிகமாக இருந்தாலும், ஸ்பெயின் – அர்ஜேண்டினா என்ற இரு ஜாம்பவான்கள் சந்திக்கும் இறுதியாட்டம் என்பதால் இரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.



