Latestஉலகம்

உலகம் முழுவதும், 500 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்

பாரிஸ், பிப்ராவரி 1 – உலகின் மொத்த மக்கட் தொகையில், 62.3 விழுக்காட்டினர் அல்லது 500 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.

2023-ஆம் ஆண்டு, 0.9 விழுக்காடு அதிகரித்து பதிவான உலக மக்கட் தொகையை காட்டிலும், சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

குறிப்பாக, கடந்தாண்டு நெடுகிலும் சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை 5.6 விழுக்காடாக பதிவானதே அதற்கு சான்றாகும்.

We are Social எனும் மெல்ட்வாட்டர் செய்தி ஊடகம் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு நிறுவனத்தின் மிக அண்மைய ஆய்வில் அது தெரிய வந்துள்ளது.

உலகின் மொத்த மக்கட் தொகையில், மிக அதிகமாக, 219 கோடி பேர் முகநூலை பயன்படுத்தும் வேளை ; இன்ஸ்டாகிராமில் 165 கோடி பேரும், டிக் டொக்கில் 156 கோடி பேரும் பயனர்களாக உள்ளனர்.

அதே சமயம்ழ் விக்கிபீடியாவில் அதிகம் தேடப்பட்ட அம்சமாக ChatGPT மற்றும் AI – செயற்கை நுண்ணறிவு ஆகியவை திகழ்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!