Latestமலேசியா

உலகளவில் திருமதி இந்தியா 2 முக்கிய விருதுகளை மருத்துவ தொழிலதிபர் ரேஷ்மா பிரகாஷ் வென்று மலேசியாவுக்கு பெருமையை தேடித்தந்தார்

ஜோகூர் பாரு, ஜூன் 18- மலேசியப் பிரதிநிதிகள் மதிப்புமிக்க அனைத்துலக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று உயரிய விருதுகளுடன் தாயகம் திரும்புவதை நாம் அடிக்கடி பார்ப்பதில்லை, ஆனால் ஜோகூரில் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரேஷ்மா பிரகாஷ், ( DR Reshma Prakash ) இரு முக்கிய விருதுகளை வென்று மலேசியாவுக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

Haut Monde Mrs India Worldwide 2024 போட்டியின் கிராண்ட் பைனலில் (Grand finalist) Mrs India Worldwide Water 2024 மற்றும் Mrs India Worldwide South Asia 2024 என முடிசூட்டப்பட்டார். அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசில் துபாயில் நடைபெற்ற உலகளாவிய Haut Monde Mrs India Worldwide 2024 போட்டியின் இறுதிச் சுற்றில் Mrs India Worldwide Water 2024 மற்றும் Mrs India Worldwide South Asia 2024 இரண்டு விருதுகளை அவர் முடிசூடினார். ஜோகூர் சிகாமாட்டைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான ரேஷ்மா, அந்த போட்டியில் Mrs Elegant துணை விருதையும் வென்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!