Latestமலேசியா

உலகின் நம்பகமான 28 நாடுகள் பட்டியலில், மலேசியாவுக்கு 7-வது இடம்

கோலாலம்பூர், ஜூன் 28 – 2024 எடெல்மேன் டிரஸ்ட் பரோமீட்டர் (Edelman Trust Barometer) கருத்து கணிப்பில், உலகின் ஏழாவது மிகவும் நம்கத்தன்மை மிகுந்த நாடாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது.

28 நாடுகள் அந்த கருத்து கணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள், வணிகங்கள், அரசாங்கம் மற்றும் ஊடகம் மீதான பொது நம்பிக்கையின் சராசரி விழுக்காட்டை குறிக்கும் ஒட்டு மொத்த குறியீட்டில், மலேசியா ஆறு புள்ளிகள் அதிகம் பெற்று 68 மொத்த புள்ளிகளை பதிவுச் செய்து, அந்த பட்டியலில் இரு இடங்கள் முன்னேறியுள்ளது.

அந்த பட்டியலில், 79 புள்ளிகளை பெற்று சீனா முதலிடத்தில் இருக்கும் வேளை ; 76 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் முறையே, ஐக்கிய அரபு சிற்றரசு, இந்தோனேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து, சிங்கப்பூர், கென்யா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் உள்ளன.

மலேசியா மீதான நம்பிக்கை அதிகரிப்பு, நாட்டின் நிர்வாகம் மற்றும் நிறுவன கட்டமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள கண்ணோட்டத்தின் மாற்றத்தை காட்டுவதாக, எடெல்மேன் மலேசியாவின் தலைமை இயக்குனர் கிறிஸ் டி குரூஸ் (Chris de Cruz) கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!