Latestமலேசியா

உலகின் மோசமான 100 உணவுகள் பட்டியல் ; ‘நாசி கோரேங் கம்பேங்கிற்கு’ 48-வது இடம்

கோலாலம்பூர், ஜன 7 – தனித்துவமான சுவைக்காக மலேசியாவின் உணவு வகைகள், அவ்வப்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதை நாம் பார்த்திருப்போம்.

கடந்தாண்டு கூட, உலகெங்கிலும் உள்ள 100 சிறந்த உணவு வகைகளில், “ரொட்டி சானாய்’ இரண்டாவது சிறந்த உணவாக மதிப்பிடப்பட்டது.

அதே போல, அண்மையில் டேஸ்ட் அட்லஸ் (Taste Atlas) உலகெங்கிலும் உள்ள உணவுகளை உள்ளடக்கி “உலகின் 100 மோசமான உணவு” எனும் மற்றொரு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, மலேசியாவின் “நாசி கோரேங் கம்பேங்” (Nasi Goreng Kambing) அந்த பட்டியலில் 48-வது இடத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து நட்சத்திரங்களில், நாசி கோரேங் கம்பேங், 2.6 நட்சத்திர மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது.

இந்நிலையில், முதல் ஐந்து மோசமான உணவு வகைகள், முறையே ஐஸ்லாந்து, அமெரிக்கா, இஸ்ரேல், ஸ்வீடன் மற்றும் லாட்வியா (Latvia) ஆகிய நாடுகளை சேர்ந்தவையாகும்.

இந்நிலையில், முதல் முறையாக மலேசியர்களும், சிங்கப்பூர் நாட்டவர்களும், இந்தோனேசியர்களும் ஒன்றிணைந்து நாசி கோரேங் கம்பேங் சுவையை தற்காத்து பேசி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

“நாசி கோரேங் கம்பேங் சுவையான உணவு வகையாகும். அதனை எப்படி மோசமான உணவுகள் பட்டியலில் சேர்த்தீர்கள்?” எனவும் “உங்களுக்கு உண்மையில் நாக்கு உள்ளதா? எப்படி அதனை நீங்கள் சுவைத்தீர்கள்?” எனவும் இணையப் பயனர்கள் பலர் தொடர்ந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!