Latestவிளையாட்டு

உலகின் 100 சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ரோனால்டோவின் பெயர் நீக்கம்

லண்டன், டிச 22 – உலகின் 100 சிறந்த கால்பந்தாட்டக்காரர்கள் பட்டியலில் கிறிஸ்தியானோ ரோனால்டோவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு விரைவில் நிறைவை அடைகின்ற நிலையில், விளையாட்டு சஞ்சிகை ஒன்று உலகின் சிறந்த 100 விளையாட்டு ஆட்டக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அப்பட்டியலில் 41 போட்டிகளில் 34 கோல்கள் மற்றும் 12 முறை கோல் அடிப்பதற்காக உதவிய, போர்த்துகள், அல் நசர் அணியின் விளையாட்டாளரான கிறிஸ்தியானோ ரோனால்டோவின் (Cristiano Ronaldo) பெயர் இடம்பெறவில்லை.

இதனிடையே லியோனல் மெஸ்ஸி உட்பட மன்செஸ்டர் சிட்டி மற்றும் பல அணியினை சேர்ந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், 5 முறை “Ballon d’Or” விருது வென்ற இவரின் பெயர் நீக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் முன்னிலையில் இருந்த அவர் தற்போது பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது கவலையளிப்பதாக அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!