Latestமலேசியா

உலகில் அதிக அமைதியான நாடுகளின் பட்டியலில் மலேசியா 10 ஆவது இடத்தில் உள்ளது

கோலாலம்பூர், ஜூன் 16 – 2024 ஆண்டில் உலகில் அதிக அமைதியான நாடுகளின் குறியீட்டில் ஒன்பது இடங்களில் உயர்ந்து தற்போது மலேசியா 10 ஆவது இடத்தை பெற்றுள்ளது. உலகளாவிய நிலையில் அமைதி நிலை சராசரி 0.56 விழுக்காடு வீழ்ச்சியடைந்து, தொடர்ந்து 5ஆவது ஆண்டாக இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக பொருளாதாரம மற்றும் அமைதிக்கான கழகம் 2024ஆம் ஆண்டின் உலகளாவிய அமைதி குறியீடு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த குறியீட்டில் மலேசியா 19ஆவது இடத்தில் இருந்தது. அண்டை நாடான சிங்கப்பூர் உலகில் அதிக அமைதியான நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தோனேசியா 48ஆவது இடத்திலும், லாவோஸ் 49 ஆவது இடத்திலும் , கம்போடியா 70 ஆவது இடத்திலும் மற்றும் தாய்லாந்து 75ஆவது இடத்திலும் உள்ளன. மேலும் உள்நாட்டு குழப்பமின்றி அமைதியான நாடுகளின் பட்டியலில் மலேசியா ஐந்தவாது இடத்திலும் ராணுவ ரீதியில் மூன்றாவது நாடாகவும் மலேசியா திகழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து (Iceland ) முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் அயர்லாந்து ( Ireland) ,ஆஸ்திரியா ( Austria ) மூன்றாவது இடத்திலும் , New Zealand நான்காவது இடத்திலும், சிங்கப்பூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!