Latestஇந்தியா

உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றார்.

மும்பை, மார்ச் 10 – இந்தியாவில் மும்பையில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை செக் குடியரசின் ‘Krystyna Pyszkova’ வென்றார். இவ்வாண்டு நடைபெற்ற 71 ஆவது உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவிற்கு உலக அழகிப் பட்டத்தை 2022 ஆம் ஆண்டின் உலக அழகி ‘Karolina Bielawska’ சூட்டினார். 24 வயதான கிறிஸ்டினா ‘Parague’ நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

2006ஆம் ஆண்டுக்குப் பின் செக் குடியரசின் அழகி ஒருவர் இரண்டாவது முறையாக உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் கலந்துகொண்ட இந்திய அழகி Sini Shetty முதல் 4 இடங்களுக்கு தேர்வு பெறத் தவறினார். உலக அளவில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து ‘Sini Shetty’யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் அளித்த பதில் நடுவர்களை ஈர்க்கவில்லை. 8 இடங்களில் ஒரு இடத்தை மட்டுமே ‘Sini Shetty’ பிடிக்க முடிந்தது.

இம்முறை நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு 140 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒளிபரப்பப்பட்டது. இப்போட்டியில் இரண்டாவது இடத்தை லெபனான் நாட்டின் ‘Yasmina Zaytoun’வும் ‘Trinidad Tobago’வின் ‘Ache Abrahams’ , மூன்றவாது இடத்தையும் , ‘Botswna’வின் ‘Lesego Chombo’ நான்காவது இடத்தையும் பெற்றனர்.

மேலும் ஐரோப்பிய உலக அழகி பட்டத்தையும் கிறிஸ்டினா வென்றார். உலக ஆசிய மற்றும் ஒசானியா அழகியாக ‘Yasmina Zaytoun’னும் , அமெரிக்கா மற்றும் கெரிபியன் உலக அழகியாக ‘Ache Abrahas’ மற்றும் ஆப்பிரிக்க உலக அழகி விருதை ‘Lesego Chombo’வும் வென்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!