Latestமலேசியா

உலு திராம் போலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ; ராடின் இம்ரான், 4 குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஜூன் 19 – ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபரின் ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

பயங்கரவாத சித்தாந்தம் தொடர்பில், அவர்கள் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

62 வயது ராடின் இம்ரான் (Radin Imran), 34 வயது ராடின் ரோமியுல்லா ராடின் இம்ரான் (Radin Romyullah Radin Imran), 59 வயது ரோஸ்னா ஜன்தான் (Rosna Jantan) ,23 வயது பர்ஹா சோப்ரினா ராடின் இம்ரான் (Farhah Sobrina Radin Imran) மற்றும் 19 வயது மரியா ராடின் இம்ரான் (Mariah Radin Imran) ஆகியோரே அவர்கள் ஆவர்.

அதே சமயம், உலு திராம் போலீஸ் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்ட 21 வயது சந்தேக நபர் ராடின் லுக்மானின் தந்தையான
ராடின் இம்ரானுக்கு எதிராக, இதர நான்கு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

IS தொடர்பான பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பியது, சொந்தமாக தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளை வைத்திருந்தது, IS கும்பலின் தலைவன் அபு பாக்கார் அல்-பக்தாதிக்கு (Abu Bakar Al-Baghdadi ) விசுவாசமாக செயல்பட்டது, அந்த தீவிரவாத அமைப்பின் புத்தகங்களை வைத்திருந்தது என்பது அந்த நான்கு கூடுதல் குற்றச்சாட்டுகள் ஆகும்.

2014-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே 17-ஆம் தேதி வரையில், கம்போங் சுங்கை தீராமில் அவர்கள் அக்குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம், அச்சம்பவத்தில் இரண்டாவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராடின் ரோமியுல்லா, இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள வேளை ;

சிங்கப்பூர் நாட்டவரான ரோஸ்னா உட்பட இதர இருவர், பயங்கரவாதம் தொடர்பில், வேண்டுமென்றே தகவல்களை தர தவறிய குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை, ஜூலை 31-ஆம் தேதி செவிமடுக்கப்படுமென நீதிபதி அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!