
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சரிபார்க்கப்படாத இந்தத் தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுவரை, எட்டு நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஐந்து விவகாரங்கள் எரிபொருள் விலை குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டது அடங்கும்.
மூன்று சந்தேக நபர்கள் முன்னதாகவே வரவழைக்கப்பட்டனர், மற்ற இருவரிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
கூடுதலாக, மேலும் மூன்று விசாரணைகள் புதிய மின்சாரக் கட்டணங்கள் குறித்த தவறான தகவல்களைக் கொண்டதாகும் .
1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு 500,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



