Latestமலேசியா

எதிர்க்கட்சி தலைவராக அஹ்மாட் சம்சுரியை நியமிக்க பாஸ் திட்டமா?

கோலாலம்பூர், டிச 4 – சனிக்கிமையன்று கெமமான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரெங்கானு மந்திரிபுசாரும் , பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தாரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் திட்டத்தை பாஸ் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியொரு ஆலோசனை பாஸ் கட்சிக்கு இருந்தால் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் உச்சமன்ற கூட்டத்திற்கு இந்த விவகாரத்தை பாஸ் கொண்டு வரலாம் என எதிர்க்கட்சி தலைவரும் பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளருமான ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து இப்போதைக்கு தாம் எந்தவொரு கருத்தையும் வெளியிட முடியாது என அவர் கூறினார். பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் நாட்டிற்கு நிலைத்தன்மையை கொண்டு வருவதற்கான சிறந்த வழிகள் குறித்து நாம் ஆராய வேண்டியிருப்பதாக ஹம்சா கூறினார்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தகுதியை அஹ்மாட் சம்சுரி கொண்டிருந்தால் அவர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படலாம் என தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாமி பாட்சில் கூறியிருந்தது குறித்து கெடா மந்திரிபுசார் சனுசி நோர் கருத்துரைத்திருந்தார். இது தொடர்பாக ஹம்சாவிடம் வினவப்பட்டபோது அஹ்மாட் சம்சுரியை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கும் திட்டம் பாஸ் கட்சிக்கு உண்மையிலேயே இருந்தால் தாராளமாக பெரிக்காத்தான் நேசனல் உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கலாம் என ஹம்சா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!