Latestமலேசியா

என்னை ஆதரித்தால் மட்டுமே எதிர்கட்சி MP-களுக்கு நிதி ஒதுக்கீடா? பிரதமர் திட்டவட்ட மறுப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 20 – அரசாங்க நிதி ஒதுக்கீடு வேண்டுமென்றால் பிரதமரை ஆதரிக்க வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனை விதிக்கப்படுவதாகக் கூறப்படுவதை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

அது எதிர்கட்சியினரின் அடிப்படையற்றக் குற்றச்சாட்டு என பிரதமர் சொன்னார்.

எதிர்கட்சி MP-களுக்கான நிதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை உண்மையில் அரசாங்கத்தின் நிலைத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிச் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாறாக யாரும் யாரையும் ஆதரிக்க நிர்பந்திக்கப்படவில்லை என அன்வார் தெளிவுப்படுத்தினார்.

எதிர்கட்சி MP-களுக்கும் நிதி ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தைக்குத் துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof தலைமையேற்றிருக்கிறார்.

எதிர்கட்சி MP-களுக்கு நிதி ஒதுக்கும் பரிந்துரைக்கு, ஒற்றுமை அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் மன்றத்தின் செயலகம் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக Fadillah வியாழக்கிழமைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!