Latestமலேசியா

எம்.ஏ.சி.சி விசாரணையை நிறுத்தக் கோரும் சீராய்வு மனுவை டைய்மும் குடும்பத்தினரும் தாக்கல் செய்தனர்

கோலாலம்பூர், ஜன 11- தங்களுக்கு எதிரான எம்.ஏ.சி.சி (MACC) விசாரணை நிறுத்தக்கோரும்  சீராய்வு மனுவை முன்னாள் நிதி அமைச்சர் டைய்ம் ஜைனுதீன் மற்றும் அவரது  குடும்ப உறுப்பினர்கள்   தாக்கல் செய்தனர். பண்டோரா (Pandora) அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக செய்தி நிறுவன தகவல்கள் கூறினாலும்  எம்.ஏ.சி.சியின்,  விசாரணையின் தன்மை குறித்து தாங்கள் இருண்ட நிலையிலேயே இருப்பதாக  அவர்கள் தெரிவித்தனர். பண்டோரா அறிக்கையில் மற்ற மலேசியர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எதிரான விசாரண நடத்தப்படவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக எம்.ஏ.சி.சி நோட்டிஸ் எதனையும்  வெளியிடவில்லையென டைய்மும் அவரது குடும்பத்தினரும்  தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தங்களுக்கு எதிரான விசாரணை தொடங்கியதாகவும் டைய்ம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதிலிருந்து தங்களது சொத்துக்களை முடக்குவதற்கு மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல்கள் அல்லது தங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் குறித்து  தகவல் கேட்டு எம்.ஏ.சி.சி  அறிக்கைகளை தங்களுக்கு வழங்கியிருப்பதாக டைய்ம்   குடும்பத்தினர் சுட்டிக்காட்டினர். 

 2023ஆம் ஆண்டு இறுதியிலிருந்து எம்.ஏ.சி.சியின் நோட்டிஸ்களுக்கு ஏற்ப தாங்கள் செயல்பட்டு வந்தபோதிலும்  “Ilham Tower” பறிமுதல் செய்வது மற்றும் அந்த கோபுரத்தின் அலுவலகங்களில் பரிசோதனை செய்வது மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை எம்.ஏ.சி.சி மேற்கொண்டு வருவதாக இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் டைய்ம் ஜைனுடின் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதோடு சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம்   எதிலும் தாங்கள் சம்பந்தப்படவில்லையென அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும்  22 ஆண்டு கால தாமதற்திற்குப் பின் இப்போது விசாரணை நடத்துவது  டைய்ம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சுதந்திரத்தை மீறுவதாக இருப்பதாகவும் அந்த சீராய்வு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே  சீராய்வு  மனு மீதான விசாரனை ஜனவரி 16ஆம் தேதி  நடைபெறும் என நீதிபதி வான் அஹ்மத் ஃபரித் வான் சலே  நிர்ணயித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!