Latestஉலகம்

எவரெஸ்ட்டை விட பெரிய வால் நட்சத்திரத்தை இம்மாதம் பார்க்க முடியும்

புதுடில்லி , மார்ச் 16 – எவரெஸ்ட் சிகரத்தை விட பெரிய வால் நட்சத்திரம் எதிர்வரும் வாரங்களில் கிரகத்தை கடந்து செல்லும்போது கண்ணுக்குத் தெரியும் என்று பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

‘Live Science’-சின்படி , 12P/Pons-Brooks என்று பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம் ஒரு ‘cryovolcanic’ – அல்லது குளிர் எரிமலையாகும். நகர அளவிலான வால் நட்சத்திரம் 30 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு பிரமாண்டமான அளவில் இருப்பதோடு ஏறக்குறைய 71 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிக நீள்வட்ட வடிவில் சூரியனைச் சுற்றி வருகிறது.

4.5 அளவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த வால் நட்சத்திரம் இங்கிலாந்தின் இருண்ட இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று வார்விக் பல்கலைக்கழகத்தின் வானியல் நிபுணர் டாக்டர் ‘Paul Strom’ கூறியுள்ளார்.

வால் நட்சத்திரம் ‘Andromeda’ விண்மீன் கூட்டத்திலிருந்து மீன ராசிக்கு நகரும்போது அது பிரகாசமான நட்சத்திரங்களைக் கடந்து செல்கிறது. இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதி 12P/Pons-Brooks ஹமால் எனப்படும் பிரகாசமான நட்சத்திரத்தில் இருந்து 0.5 டிகிரி மட்டுமே அது இருக்கும். இந்த வால் நட்சத்திரம் ஏற்கனவே இரவு வானில் காணப்பட்டது .

மேலும் வரும் வாரங்களில் இது இன்னும் பிரகாசமாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஏப்ரல் மாதத்தில் அதன் அதிகபட்ச பிரகாசத்தை எட்டும் என்பதோடு ஏப்ரல் 21 ஆம் தேதி சூரியனை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!