கோலாலம்பூர், ஜூலை 25 – வங்கிகள் இனப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமான சலுகைகள் வழங்க வேண்டும் என ம.இகாவின் தேசிய உதவித் தலைவரான டத்தோ டி.முருகையா கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் குறிப்பாக வங்கிகளின் பணப் பட்டுவாடா இயந்திரமான ATM இயந்திரத்தில் தமிழ் மொழியும் இடம் பெறச் செய்வதில் மலேசிய வங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என முருகையா கேட்டுக்கொண்டார் . அந்த சங்கத்துடன் நடத்திய சந்திப்பின்போது அவர் இதனை வலியுறுத்தினார். தற்போது MEPS தானியங்கில் மட்டுமே தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. இதர வங்கிகளிள் ஏ.டி.எம் இயந்திரங்களில் தமிழ் மொழி இடம்பெறாமல் இருப்பதை முருகையா அவர் சுட்டிக்காட்டினார்.
பல ஆண்டுகளாக இது குறித்து கோரிக்கை எழுப்பட்டபோதிலும் வங்கிகள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது ஏமாற்றறத்தையும் கவலையும் ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மலேசியாவிற்கு சுற்றுலா வருகின்றனர். அவர்களுக்கு புரியும் வகையில் வங்கிகள் பணப் பட்டுவாடா இயந்திரத்தில் தமிழில் எழுதியிருந்தால் அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் முருகையா வலியுறுத்தினார். மேலும் இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ் மொழி மீது அதிக பற்றை கொண்டுள்ளதால் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என முருகையா கேட்டுக்கொண்டார். தெரிவத்தார். வங்கிகள் உரிமையாளர்கள் சங்கத்துடனான இந்த சந்திப்பில் ஈப்போ , Persatuan Muhibah Prihatin துணைத் தலைவர் ஆசிரியர் S. சுகுமாறன், சட்ட ஆலோசகர் B. பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.