Latestமலேசியா

ஐரோப்பாவில் மிரட்டும் வெப்ப அலை: செக் குடியரசு, ஸ்லோவாக்கியாவில் புதிய வரலாற்று உச்சம்

பராக், ஜூலை-1-ஐரோப்பியக் கண்டத்தை வாட்டி வதைத்து வரும் கடுமையான வெப்ப அலை, தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சுமார் 130 மில்லியன் மக்கள், 35 பாகை செல்சியஸுக்கும் அதிகமான கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

​செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தங்களின் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவுச் செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 41.9 பாகை செல்சியஸும், ஸ்லோவாக்கியாவில் 41 பாகை செல்சியஸும் வெப்பம் பதிவாகியுள்ளது.

​இந்தக் கடுமையான வெப்பம் காரணமாக யுக்ரேய்னில் மின் விநியோகக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

போதாக்குறைக்கு, குரோஷியா மற்றும் அல்பேனியா போன்ற நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது.

கடந்த ஜூன் 21 முதல் ஐரோப்பா முழுவதும் இந்த வெப்ப அலையினால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!