Latestஉலகம்

ஒன்றரையாண்டுகளாக ரயிலில் வாழ்க்கை நடத்தி வரும் ஜேர்மன் இளைஞர்

ஜேர்மன், மார்ச் 7 – ஜேர்மன் நாட்டவரான இளைஞர் ஒருவர், ஒன்றரையாண்டுகளாக ரயிலிலேயே வாழ்க்கை நடத்தி வருகிறார்.

Lasse Stolley என்ற அந்த இளைஞனுக்கு ரயில் பயணம் என்றால் மிகவும் பிடிக்குமாம். இவரின் 16 ஆவது வயதில், அவரின் ஆசையை பெற்றோரிடம் தெரிவித்து, சம்மதிக்கவும் வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இப்போது ஒன்றரையாண்டுகளாக ரயிலிலேயே வாழ்க்கை நடத்தி வருவதாகத் தெரிவிக்கிறார்.

சாப்பாடு, வேலை, தூக்கம் என எல்லாவற்றையும் ரயிலிலேயே முடித்துக்கொள்ளும் Lasse, நீச்சல் குளங்களில் குளியல் போட்டுக்கொண்டு, ஜாலியாக ஜேர்மனியை சுற்று வருகிறார்.

வருடாந்திர ரயில் பயணச்சீட்டில், முதல் வகுப்பில் பயணம் செய்யும் Lasseக்கு ஆண்டொன்றிற்கு 8,500 யூரோஸ் செலவாகிறது. அதாவது, மலேசிய மதிப்பில் RM 30, 157 ரிங்கிட் ஆகும்.

வருங்காலத்தில், ஜேர்மன் ரயில்வேயில் ஆலோசகராகப் பணியாற்றவேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!