Latestஉலகம்

ஒற்றை இயந்திரத்துடன் பெர்த்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய Qantas Airways விமானம்

பெர்த் ( ஆஸ்திரேலியா), மார்ச்-27 –  Qantas Airways நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் ஒற்றை இயந்திரத்தில் பறந்த போதும், அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

அந்த Airbus விமானம் Melbourne நகரில் இருந்து Perth நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில், நடுவானில் எஞ்சினில் கோளாறு கண்டறியப்பட்டது.

அப்போது விமானத்தின் ஒரு பக்கவாட்டில் இருந்து பெரிய சத்தம் கேட்டதாக பயணிகள் சிலர் கூறினர்.

இதையடுத்து தரையிறங்க முன்னுரிமைத் தருமாறு விமான நிலையக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திடம் விமானி கேட்டுக் கொண்டார்.

ஒற்றை இயந்திரத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய விமானத்தை, Qantas விமான நிறுவன பொறியியலாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

விமானத்தின் எஞ்சின் கோளாறடைவது அரிதாக நடப்பதாகும் ; எனினும் இரட்டை இயந்திரத்துடன் கூடிய விமானம், ஒரு எஞ்சினில் பறக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, விமானிகளும் அதற்கான பயிற்சியைப் பெற்றிருப்பதாக விமான நிறுவனம் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!