
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9,
தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமானதே அதற்குக் காரணம்.
முதலில் தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை மூச்சுத்திணறி இறந்ததாக கூறப்பட்ட நிலையில், கணவர் சுரேஷ் மனைவியின் கைப்பேசியில் பாரதி-சுமித்ரா இடையிலான நெருக்கமான புகைப்படங்களை கண்டு அதிர்ந்துபோனார்.
இதையடுத்து போலீஸாரும் விசாரணையில் துருவி எடுக்க, பாரதி–சுமித்ரா இருவரும் 4 ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கை உறவில் இருந்தது தெரியவந்தது.
குழந்தை பிறந்தபின் பாரதி, சுமித்ராவுடன் பழகுவதை குறைத்துள்ளார்.
அதுவே அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்த, தான் பெற்றக் குழந்தை என்றும் பாராமல் அதனை அவர் மூச்சுத்திணறச் செய்து கொன்றதாக போலீஸார் கூறினர்.
இரு ‘தோழிகளிடமும்’ கொலையின் பின்னணி குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தகாத உறவுக்காக சொந்தக் குழந்தையையே கொன்ற தாயின் செயல் சுரேஷ் குடும்பத்தாருக்கு தாங்க முடியாத கடும் வேதனையையும், சுற்றத்தாருக்கு பீதி கலந்த அதிர்ச்சியையும் தந்துள்ளது.



