Latestமலேசியா

ஹாங் கோங்கில் 233 மீட்டர் உயரத்திலிருந்து ‘bungee jump’ செய்த ஆடவர் மரணம்

ஹாங் கோங், டிச 6 – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங் கோங்கில் 233 மீட்டர் உயர கட்டிடத்திலிருந்து ‘bungee jump’ அதாவது உயரத்திலிருந்து குதித்த ஜப்பானிய சுற்றுப்பயணி ஒருவர், மூச்சுப் பிரச்சனை ஏற்பட்டு இறந்த சம்பவம் அந்த சுற்றுலாத் தளத்தில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், மேலிருந்து கீழே குதித்த அவர் மூச்சுப் பிரச்சனைக்குள்ளாகி இருந்ததை அங்குள்ள பணியாளர் ஒருவர் கண்டுள்ளார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டும் அவர் இறந்துவிட்டதை மருத்துவமனை உறுதிபடுத்தியது.

சீனா, ஹாங் கோங்கில் அமைந்துள்ள மக்காவ் கோபுரம் (Macau Tower), “bungee” சாகசம் செய்வதற்கான மிகவும் பிரசித்திப்பெற்ற இடமாகும்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த மக்காவ் கோபுரம் (Macau Tower), “bungee” சாகச நிர்வாகம், இறந்தவர் பாதுகாப்பு அம்சம் அனைத்தையும் கடைபிடித்தார். இனிமேல், இச்சாகசத்தில் பங்கெடுப்போர் அவர்களின் மருத்துவப் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், வலிப்பு போன்ற பிரச்சனை உடையவர்கள் இச்சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுவதாக அது கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!